Monday, March 12, 2018

தயிர்சாதம் சென்னிமலை கோவில் பிரசாதம்

தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
பால்- 1 டம்ளர்
தண்ணீர்- 1 1/2 டம்ளர்
தயிர்-3 கப்
உப்பு- தேவையான அளவு
வேகவைத்த பச்சைப்பட்டாணி- 1 கப்
வெள்ளரிக்காய்த்துருவல்- 1 கப்
கேரட் துருவல்- 1 கப்
மாங்காய்த்துண்டுகள்- 3 தேக்கரண்டி
மாதுளை முத்துக்கள்- 2 தேக்கரண்டி
திராட்சை(மாதுளைமுத்துக்கள் இருந்தால் வேண்டாம்)
தாளிக்க:
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை:
1. சாதத்தைத் தண்ணீர், பால் கொண்டு குழைவாக வேக விடவும்.
2. ஆற விட்டுக் கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
3. பிறகு தயிர் கலந்து நன்றாகக் கிளறவும்.
4. மாங்காயைப் பொடித் துண்டுகளாக நறுக்கவும்
5. வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றைத் தோலகற்றித் துருவிக் கொள்ளவும்.
6. அலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைஅலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைத் தயிர்சாதத்துடன் கலந்து விடவும்.
7. தாளிசப்பொருட்களைத் தாளித்து அதையும் தயிர்சாதத்துடன் சேர்க்கவும்.
8. அரை டம்ளர் பாலைச் சூடாக்கி அதையும் தயிர்சாதத்தில் போட்டுத் தளரக் கிளறவும்.
9. அலங்கரிக்க வைத்திருக்கும் மாதுளை முத்துக்கள் அல்லது திராட்சையைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கச் சுவையான தயிர்சாதம் தயார்